Saturday, December 10, 2011

தினேஷ்குமார் IPS பேட்டி


               சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 345-வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் ஆனவர் தினேஷ்குமார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள சின்னதண்டா கிராமத்தை சேர்ந்தவர். இவர் பொது அறிவு உலகம் இதழுக்காக பேட்டியளித்தார்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்காக "பொது அறிவு உலகம் இதழ்' சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

""ரொம்ப நன்றிங்க. பொது அறிவு உலகம் இதழை நானும் வாங்கி படித்துள்ளேன். மிகவும் அருமையான இதழ். அனைத்து போட்டித் தேர்வுகளையும் எழுதுவோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

உங்களை பற்றி சொல்லுங்கள்?

நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். சின்னதண்ட என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். பள்ளி படிப்பை மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தேன். அதன் பின் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி அக்ரி படித்து முடித் தேன். அப்போது கல்லூரி சீனியரான சங்கர் ..எஸ் அகாடமியை நடத்தி வரும் சங்கர் சார் தான் எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத சொல்லி பயிற்சியும், ஊக்க மும் கொடுத்தார். அவரால்தான் இத்தேர்வில் என் னால் வெற்றி பெற முடிந்தது.

என்னென்ன விருப்பப்பாடத்தை தேர்ந்தெடுத்தீர் கள்?

பிரிலிமனரி தேர்வில் புவியியல் பாடத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தேன். மெயின் தேர்வுக்கு புவியியல் பாடத்தை ஒரு விருப்பப்பாடமாகவும், வேளாண்மை பாடத்தை இன்னொரு விருப்பப் பாடமாகவும் தேர்ந்தெடுத்தேன்.

தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

பிரிலிமனரி, மெயின் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் உள்ளது. அவற்றை குறிப்பெடுத்து படிக்க மிகவும் உதவியாக இருந்தது. சங்கர் சார் சிலபஸில் வரும் அனைத்து பாடப் பிரிவு களுக்கும் தக்கவாறு நோட்டீஸ் கொடுப்பார். அவற்றை கவனமுடன் படித்தேன். வாரந் தோறும் தேர்வு நடத்தப்படும். அதனை சங்கர் சார் மதிப்பீடு செய்து உரிய ஆலோசனை கூறுவார். குழுவிவாதம் செய்து படித்தோம். இவையெல்லாம் இத்தேர்வை நல்லமுறையில் எழுத உதவி புரிந்தது.

நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது?

நான் ஆங்கிலத்திலேயே மெயின் தேர்வை எழுதியதால், நேர்முகத் தேர்வையும் ஆங்கிலத்திலேயே எதிர்கொண்டேன். எங்கள் பயிற்சி நிறுவனத்தில் மாதிரி இன்டர்வியூ நடத்தப்பட்டது. அதுதான் பெரும் உதவியாக இருந்தது. நேர்முகத்தேர்வில் சமீபத்தில் நடப்பு நிகழ்வுகள், தமிழகம் எதிர்நோக்கும் நதிநீர் பிரச்சினைகள் போன்றவற்றில் அதிகம் கேள்வி கேட்டனர். அவை அனைத்துக்கும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக பதில் தந்தேன். யுபிஎஸ்சி குழுவினரும் நல்ல அணுகுமுறையுடன் கேள்வி கேட்டதால் பதட்டப்படாமல் பதில் தர முடிந்தது.

"பொது அறிவு உலகம்' இதழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"பொது அறிவு உலகம் இதழ் மேட்டூரில் கிடைப்பதால் தவறாமல் வாங்கி படிப்பேன். அதில் வரும் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் இந்த தேர்வுக்கான தயாரிப்பில் உதவியாக இருந்தது. இறையன்பு ஐஏஎஸ் சிவில் சர்வீசஸ் பற்றி கூறிய பதில்கள் தேர்வை பற்றி புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட டாக்டர் அகிலன் இராம்நாதன் அவர்கள் எழுதிய " ஐஏஎஸ் யாரும் ஆகலாம்!' என்ற நூல் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு சிறப்பாக வழிகாட்டும் நூல். அது எனக்கு உதவிகரமாக இருந்தது.

No comments:

Post a Comment