Saturday, December 10, 2011

கிராமத்து ஐ.ஏ.எஸ்.க்களின் நெகிழ்ச்சிக் கதை – ஐ.ஏ.எஸ் ஏழைக்கு எட்டும் கனிதான்!


எங்க வீட்டுல டக்டக்னு தறி போடற சத்தம்தான் எப்போதும் கேட்டுகிட்டே இருக்கும். அப்பா அம்மா தறிபோடுவார்கள்.
எனக்கு ஒரு அண்ணன். எங்க குடும்பத்துல யாரும் படிச்சவங்க இல்லை. வர்ற வருமானம் சாப்பாட்டுக்கும் வீட்டுச் செலவுக்குமே சரியாப் போய்டும். சின்ன வயசுலேர்ந்து நான் நல்ல படிப்பேன். எனக்கு இறையன்பு ..எஸ். பெரிய இன்ஸ்பரேஷன். டிகிரி படிக்க ஆசைப்பட்டபோதுஅதெல்லாம் சாத்தியமாஎன்று யோசித்த டிப்ளமா படிக்க சொன்னார்கள்உடனே வேலை கிடைக்குமே என்று! வேலைப்பார்த்தபடி அஞ்சல்வழியில் பி.காம். படித்தேன். ..எஸ். கனவு மட்டும் மனதில் ஒரு ஓரத்தில் என்னை ஆட்டிப்படைத்தது. சென்னையில் சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளை பற்றி கேள்விப்பட்டேன். சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு படிப்பதற்கான என் அத்தனை செலவுகளையும் அவர்கள் ஏற்றார்கள். முழுமூச்சா படிச்சேன். என் கனவு இன்று நிஜமானதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லைஎன்று இமைகள் படபடக்க கண்கலங்கிப் பேசும் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த ஏழைப்பெண் எஸ். சத்யாவிற்கு .ஆர்.எஸ். அல்லது .எஃப்.எஸ் கிடைக்குமாம்!
சத்யாவின் வெற்றிக்கதை இதுவென்றால், ஹரிகுமாருடையது இன்னும் நெகிழ்ச்சியானது. காஞ்சிபுரம் மாவட்டம், பாலூர் கிராமத்தில் அவரது தாயார் இன்னமும் இட்லிகடை வைத்த தன் ஜீவனத்தை நடத்தி வருகிறார். வீட்டில் ஹரியைத் தவிர இரண்டு சகோதரிகள். இரண்டு பேண்ட், சட்டையோடு சென்னை வந்துமனித நேர அறக்கட்டளைநடத்தும் இலவச ஹாஸ்டலுக்கு வந்திருக்கிறார். தொடர்ந்து மூன்று வருடங்கள் தங்கி, நான்காவதுஅட்டெம்டில்வெற்றியைத் தட்டிப் பறித்துள்ளார். இவருக்கும் .ஆர்.எஸ். உறுதியாம்.
என் அம்மா இனிமே இட்லி அடுப்புல வேகக்கூடாது!’ என்கிற போது ஹரியின் குரல் உடைகிறது.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் சிறியதாக ஜவுளிக்கடை வைத்திருக்கிறார் ஸ்ரீனிவாசனின் தந்தை. சாதாரணக் குடும்பம். ஒரே அட்டெம்டில் 134-வது ரேங்க் வந்து ..எஸ். ஆகியுள்ளார். “தங்கும் இடத்திலிருந்து சாப்பாடு உள்பட எல்லாவற்றையும் மனிதநேயம் பார்த்து கொண்டதால் எந்த கஷ்டமும் இல்லாமல் படித்தேன். இல்லாவிட்டால் என்னால் ..எஸ். படிப்பையெல்லாம் நினைச்சுக்கூட பார்க்க முடியாது.’ என்று பிரமிப்புடன் பேசுகிறார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பக்கம் எண்ணமங்களம் என்ற ஒரு ஊர் இருக்கிறது என்று அம்மாவட்டத்திலுள்ள சிலருக்கே தெரியும். இன்று அந்த குக்கிராமத்திலிருந்து சரண்யா என்ற மாணவி .ஆர்.எஸ்ஸுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார்!
கவர்ன்மெண்ட் ஸ்கூலில் தமிழ் மீடியத்தில் தான் படித்தேன். இங்கிலீஷில் சரளமா பேசினால்தான் சிவில் சர்வீஸ் எக்ஸாமெல்லாம் எழுத முடியும்.. என்று தோழிகள் சொன்னதையெல்லாம் இப்போது நினைச்சால் சிரிப்பு வருகிறது..’ என்ற புன்னகைத்தார்.
நான் படிக்கலை. நீயாவது படிச்சு கலெக்டராகணும்என்று பழைய சினிமாக்களில் வயதான அப்பாக்கள் சொல்வதை நிஜமாகவே சொல்லியிருக்கிறார் திருவாரூர் அருகே காங்கேய நகரத்தைச் சேர்ந்த செந்தில் குமாரின் தந்தை. செந்திலின் கதையில் சுவாரஸ்யமான விஷயம், இவரது ஊரேதம்பி! நல்லா படி…’ என்று ஊக்கப்படுத்தியது.
ஈரோடு சென்னிமலையிலிருந்து ..எஸ். ஆகியுள்ளார் அரவிந்த். அகில இந்திய அளவில் எட்டாவது ரேங் வாங்கியுள்ளார். இவரைப் போலவே மனிதநேயத்தில் சேர்ந்து படித்து இந்த வருடம் சாதனை புரிந்த இன்னொரு மாணவர் வருண்குமார். திருச்சியைச் சேர்ந்த பல் மருத்துவரான இவர் அகில இந்திய அளவில் மூன்றாவது ரேங் வந்துள்ளது அசாதாரணமானது.
மனித நேயத்தில் தங்களை ஊக்கப்படுத்தும் விஷயங்களை அடுக்கினார் வருண்குமார்.
முதல் நிலை, மெயின் ஆகிய இரண்டு தேர்வின் போதும் ஹாஸ்டல் வசதி, கோச்சிங், சாப்பாடு, புத்தகங்கள், நியூஸ் பேப்பர், மருத்துவச் செலவு, யோகா வகுப்புகள் என்று எல்லா சௌகரியங்களையும் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். கோச்சிங்கிற்காக பெரிய பெரிய பேராசிரியர்களை அழைக்கிறார்கள். அடுத்தது டெல்லியில் நேர்முகத் தேர்விற்குப் போவதற்கு முன்பு ஒவ்வொரு மாணவனையும் பன்னிரண்டு தடவையாவதுமாக் இண்டர்வியுஎன்று அழைக்கப்படும் மாதிரி நேர்முகத் தேர்விற்கு தயார்ப்படுத்துவார்கள். இதில் ஓய்வு பெற்ற ..எஸ்., .பி.எஸ். அதிகாரிகள் உட்கார்ந்து டெல்லி நேர்முகத் தேர்வில் நடப்பது போன்றே மாணவர்களை குடைந்தெடுப்பார்கள். இப்படிப்பட்ட விசேஷ பயிற்சி இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது.
நேர்முகத் தேர்வுக்கு மாணவர்களுக்கு புது டிரஸ், ஷூ, மாணவிகளுக்கு புடவையெல்லாம் வாங்கி தந்து டெல்லிக்கு ஃப்ளைட்டில் அழைத்துப் போவது பெரிய அதிர்ஷ்டம். எங்கள் சேர்மன் சைதை துரைசாமியும் எங்களுடன் தங்குவார். தன் சொந்த பையன்கள்போல் பார்த்துக்கொள்வார்என்றார்.
இந்த வருடம் தமிழ்நாட்டிலிருந்து சென்று வெற்றி பெற்ற 98 பேரில் 36 பேர் சைதை துரைசாமியின் அறக்கட்டளையிலிருந்த சென்றவர்கள் என்பது தமிழகம் நிச்சயமாக பெருமைப்பட வேண்டிய விஷயம்! யார் சொன்னது..எஸ். ஏழைகளுக்கு எட்டாத கனி என்று?

No comments:

Post a Comment