Saturday, December 10, 2011

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி



என் பிரெண்ட் பையன் நல்லா படிக்கிறான் ..எஸ் எக்ஸாம் எழுதப் போறானாம்.
நீயும் இருக்கியே ..மக்கு..என்ன படிச்சி என்ன கிழிக்கப் போறியோ தெரியல என்று ,தன் பிள்ளைகள் மீது ஆதங்கப் படும் பெற்றோர்கள் ஏனைய இல்லங்களில் இன்னும் இருக்கதான் செய்கிறார்கள்..
படிப்பை விட, கடின உழைப்பு,விடா முயற்சியே ஒருவரை வெற்றியடைய செய்யும்.ஏன் பத்தாவது படித்திருந்தால் கூட போதும், ..எஸ் ஆக முடியும், என்று நிரூபித்திருக்கிறார் ஒருவர்.அவர்தான் முனுசாமி.
ஒன்று UPSC தேர்வெழுதி ..எஸ். அதிகாரியாவது ,மற்றொன்று பதவி உயர்வு மூலம் ..எஸ். அதிகாரியாவது.பதவி உயர்வு மூலம் ,இந்த ஆண்டு தமிழகத்தில் 19 பேர் ..எஸ்.  அதிகாரியாகி உள்ளனர்.அதில் முனுசாமியும் ஒருவர்.
1973ம் ஆண்டு குரூப் 4 தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர்ந்த முனுசாமி பள்ளிப்பட்டு தாலுகாவில்,18 வயதில் இளநிலை உதவியாளராக பணியை தொடங்கி உள்ளார். பின்னர் வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பதவி உயர்வுகளை பெற்றுள்ளார்..
அரசுத்துறையில் பல்வேறு பணிகளில் 37 ஆண்டு கால நீண்ட அனுபவம் பெற்று,பணியில் சிறப்பாக செயல்பட்டதுமே, அவருக்கு ..எஸ். தகுதியை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது..

No comments:

Post a Comment