Saturday, December 10, 2011

ஐ.ஏ.எஸ்.: தொட்டுவிடும் தூரம்தான்


மிழக மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியும், சரியான வழிகாட்டுதலுக்கும் காரணமாக தமிழக மாணவர்கள் இந்திய அளவில் சாதனைக் கொடி காட்டியிருக்கிறார் கள். டெல்லி சென்று படிக்க வேண்டும் என்ற நிலைமாறி தமிழகத்திலும் பல தரமான பயிற்சி மையங்கள் உருவாகியிருப்பதும் இதற்கு காரணம்.


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள கிராமத்தின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்த தினேஷ், முதல் முயற்சியிலேயே .பி.எஸ் ஆகி யிருக்கிறார். வேளாண்மை பட்டதாரியான இவர், சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கர் ..எஸ். பயிற்சி மையத்தில் படித்தவர். இவரைப் போல இங்கு படித்த வம்சதாராவும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.


தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ பாலாஜி, மூன்றாவது முயற் சியில் வெற்றி பெற்றிருக் கிறார். கடந்த இரண்டு முறை சொந்த ஊரில் படித்த நிலையில், கடந்த ஆண்டு சென்னை வந்த இவர், தீவிரமான முயற்சி செய்து இந்த முறை வென்றிருக்கிறார்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த சுப்புலட்சுமி, இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்று ஐஏஎஸ் ஆகிறார். அதே போல் குரூப்-2-ல் துணை கலெக்டர் பதவிக்கு தேர்வான பி.வெங்கடேஷ் என்ற இளைஞரும் இத்தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் ஆகிறார். இவர்கள் அனைவரும் சங்கர் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்த வர்கள். தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களில் அதிகபட்சமாக 37 பேர் இங்கு பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

""சரியான வழிகாட்டுதல், தெளிவான திட்ட மிடல், கடினமான உழைப்பு, அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும்'' என்கின்றனர் இந்த இளம் தலைமுறையினர்.

""ஐஏஎஸ் தேர்வு என்பது கடினமானது: சாதாரண மாணவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியாது என்பது போன்ற மனப்போக்கு பெரும்பாலானவர்களிடம் உள்ளது. இது முற்றிலும் தவறானது. நமக்கு ஏற்ற விருப்பப் பாடங்களை தேர்வு செய்து, சரியான புத்தகங்களைப் படிக்க வேண்டும். திட்டமிட்டு உழைத்தால் இரண்டு ஆண்டுகளில் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம். பல ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. இந்த ஆண்டு எங்களிடம் பயிற்சி பெற்ற 5 பேர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளனர்'' என்கிறார் சங்கர் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் டி.சங்கர்

""இந்த தேர்வுக்கு இரண்டு விருப்பப் பாடங்கள், பொதுப்பாடம் ஆகியவற்றைப் படிக்க வேண்டி இருப்பதால், அதிக காலம் தேவைப்படும். இதைக் கருத்தில் கொண்டு இப்போதிலிருந்தே முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கு இணைந்த பயிற்சி அளிக்கிறோம். புவியியல், சமூகவியல், தமிழ் உள்ளிட்ட பாடங்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. சிவில் சர்வீசஸ் தொடர்பான எந்த தகவல்களை வேண்டுமானாலும் விருப்ப முள்ளவர்கள் எங்களிடம் கேட்டுப் பெறலாம். எங்களுடைய சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற இணைய தளத்திலும் விவரங்கள் இருக்கின்றன'' என்கிறார் கடந்த பல ஆண்டுகளாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ்களை உருவாக்கிவரும் டி.சங்கர்.

No comments:

Post a Comment