Saturday, December 10, 2011

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கும் மனிதநேய அறக்கட்டளை!




                ""ணம் இருந்தால் அட்மிஷன், இல்லாட்டி இடத்தை காலிபண்ணு'' என்று பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கல்வி நிறுவனங்களை வைத்திருப்போர் மத்தியில், சேற்றில் ஒரு செந்தாமரையாய் விளங்குகிறது "மனிதநேய அறக்கட்டளை'.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் பொருட்டு "மனிதநேயம் ..எஸ்., .பி.எஸ், இலவச பயிற்சி மையம்'. ஒன்றை நடத்தி வருகி றார் முன்னாள் எம்.எல்..வான சைதை துரைசாமி. 2006-ல் சென்னையில் தொடங்கப்பட்ட இந்த மையம் மா.வாவூசி என்பவரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலிமிருந்து மாணவர்களை தேர்வு செய்து தங்குமிடம், உணவு, உடை, பாடப்புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள் என அனைத்துமே இலவச மாக வழங்கப்படுகிறது. 2007-ம் ஆண்டு பயிற்சி பெற்றவர்களில் 26 பேரை தேர்ந்தெடுத்து ..எஸ் நேர்முகத் தேர்வுக்காக சொந்த செலவில் டெல்லிக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களில் 12 பேர் ..எஸ்., .எஃப்.எஸ்., .பி.எஸ். மற்றும் .ஆர்.எஸ், பதவிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

இதையடுத்து 2008-ல் 65 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுப்பப்பட் டனர். தற்போது சிவில் சர்வீஸ் தேர்வு முடிவின்படி அதில் இம்மையத்தில் பயிற்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் சின்னக்கடை வீதியைச் சேர்ந்த மாணவர் அருண்சுந்தர் தயாளன் அகில இந்திய அளவில் 22-வது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை பெற்றுள்ளார். அதே போல போடிநாயக்கனூர் திருச்சிற்றம் பலத்தைச் சேர்ந்த ரவிசங்கர் அகில இந்திய அளவில் 117 இடத்திலும், ஈரோடு என்.ஜி.ஜி..காலனி ராஜா நகரைச் சேர்ந்த பிரவீனா என்பவர் 102-வது இடத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுப்புலட்சுமி 147-வது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல இளையராஜா என்பவர் முதல் முயற்சியிலேயே 131-வது இடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். 7 பெண்கள், 18 ஆண்கள் உட்பட 25 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பயிற்சியளித்த தோடு மட்டுமில்லாமல் டெல்லிக்கு அழைத்துச் சென்று அங்கேயும் ஒருமாதம் பயிற்சி அளித்து சாமானியரையும் சாதனையாளராக அடையாளம் காட்டும் இந்த மையத்தின் சேவை பாராட்டுக்குரியது. இந்த பயிற்சி மையம் 2006-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. இதில் சேர்வதற்கான அறிவிப்பு முக்கிய செய்தித்தாள்களில் வெளிவரும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்குத் தேர்வும், நேர்காணலும் நடத்தப் படும். முக்கியமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் நிறுவனர் சைதை துரைசாமி இளம் வயதில் ஆட்சி பணியாளராக ஆசைப்பட்டார். அது நிறைவேறவில்லை. தனது பயிற்சி மையம் மூலம் ..எஸ், .பி.எஸ்., அதிகாரிகளை உருவாக்கி வருகிறார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் பணியாற்றும் மனதுக்கு சொந்தக்காரர்கள் சைதை துரைசாமியின் இந்த கல்வித்தொண்டு எல்லா திசைகளிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சைதை. சா. துரைசாமியின் மனிதநேயம்
..எஸ்., .பி.எஸ்., இலவச பயிற்சி மையம்,
28, முதல் பிரதான சாலை,
சி..டி. நகர்,
சென்னை- 600 035
தொலைபேசி: 24358373, 9940670110

1 comment:

  1. என்மனைவியின்ஐஏஎஸ்கனவுநனவாகுமா பணரீதியாகபின்தங்கியஎனதுமனைவியின்படிப்புமுற்றிலும் இலவசமாககிடைக்குமா

    ReplyDelete